ADDED : மே 14, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் பாடசாலையில் காஞ்சி மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ விழா நடந்தது. உலக நன்மை கருதி மாலை 4:00 மணி முதல் வேதபாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ஹரீஷ் சீனிவாசன் ஐயர், நிர்வாகிகள் ஸ்ரீகுமார், பாலசுப்பிரமணியன், அத்யபகர் வரதராஜ பண்டிட் செய்திருந்தனர்.
முள்ளிப்பள்ளம் காஞ்சி மடத்தின் கிளையில் மஹா பெரியவருக்கு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெங்கட்ராமன், வீரமணிகண்டன் செய்திருந்தனர்.