தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/உதவி புவியியலாளர்கள் 39 பேர் பணி நியமனம்

உதவி புவியியலாளர்கள் 39 பேர் பணி நியமனம்

உதவி புவியியலாளர்கள் 39 பேர் பணி நியமனம்


ADDED : பிப் 29, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : உதவி புவியியலாளர்களாக தேர்வான, 39 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 29 உதவி புவியியலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கும், கருணை அடிப்படையில், அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்ட நான்கு பேருக்கும், பணி நியமன ஆணைகளை, அமைச்சர் துரைமுருகன் நேற்றுமுன்தினம் வழங்கினார்.

அதேபோல, மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மைய அலுவலகத்திற்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 10 உதவி புவியியலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணையை நேற்று, அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, புவியியல் மற்றும் இயற்கை வளங்கள் துறை செயலர் பணீந்திர ரெட்டி, கமிஷனர் பூஜா குல்கர்னி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us