/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம்
/
அரசு போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம்
ADDED : நவ 06, 2024 06:10 AM
மதுரை : தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2340 டிரைவர், கண்டக்டர்கள், 537 தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 51 ஆயிரத்து 741 டிரைவர்கள், 46 ஆயிரத்து 491 கண்டக்டர்கள், 14 ஆயிரத்து 312 தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் வரும் 1.1.2025ன் படி டிரைவர் பணியிடங்கள் 5134, கண்டக்டர்கள் பணியிடங்கள் 5160, தொழில்நுட்ப பணியிடங்கள் 2143 என மொத்தம் 12 ஆயிரத்து 428 பணியிடங்கள் காலியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் கும்பகோணம் கோட்டம், விரைவு போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர், கண்டக்டர்கள் உட்பட 812 பணியிடங்களை நிரப்ப அனுமதித்து பணிகள் நடக்கின்றன.இதைத் தவிர்த்து கூடுதல் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2340 டிரைவர், கண்டக்டர்கள் பணியிடங்கள், 537 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்பப்படும்.
இப்பணியிடங்களில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படியும் தொழில்நுட்ப பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலமும் நிரப்பப்படும்.
அதன்பின் 1.8.2025ன் படி 769 எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான பற்றாக்குறை பணியிடங்களும் (பேக்லாக்) நிரப்ப வேண்டும் எனவும் அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.