/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு பார்வையாளர்கள் நியமனம்
/
பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு பார்வையாளர்கள் நியமனம்
ADDED : ஏப் 17, 2025 06:20 AM
மதுரை: தமிழக பா.ஜ.,வில் 66 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு கீழ் கட்சி பணியாற்ற துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என 20 பதவிகளில் ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் என பலருக்கும் பிரதிநிதித்துவம் தரவேண்டும். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நகர், மேற்கு, கிழக்கு என 3 மாவட்டங்களிலும் முறையே, மாரிசக்ரவர்த்தி, சிவலிங்கம், ராஜசிம்மன் தலைவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்துள்ள நிர்வாகிகளை தேர்வு செய்ய கருத்துக் கேட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை நகர், கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களுக்கு தேசிய குழு உறுப்பினர் மகாராஜன், மதுரை மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, தேனி மாவட்டங்களுக்கு தேசிய குழு உறுப்பினர் திருமலைச்சாமி ஆகியோர் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவாரத்தில் ஆட்களை தேர்வு செய்து மாநில அமைப்புக்கு தெரிவிப்பர். அவர்கள் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.