நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுார் அல் அமீன் மேல்நிலைப் பள்ளி இலக்கியப் பூங்கா சார்பில் கல்வி அமைச்சரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுத் தந்தமைக்காக தலைமை ஆசிரியர்ஷேக் நபிக்கு பாராட்டு விழா நடந்தது. தாளாளர் முகமது இத்ரிஸ் தலைமை வகித்தார். கவிஞர் மூரா முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற மகேந்திரபாபு, மாவட்ட தமிழ் இயக்க பொருளாளர் மாரியப்பன், செயலாளர் பழனிசாமி, மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், உதவி தலைமை ஆசிரியர் ரகமத்துல்லா, ரஷாதி மவுலானா அப்துல் அஜீஸ், தமிழாசிரியர் தமிழ்க்குமரன், ஆதித்தா பங்கேற்றனர். பின்னர் நடந்த புத்தக மதிப்புரை நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
உதவித் தலைமை ஆசிரியர் அல்ஹாஜ் முகமது நன்றி கூறினார்.

