நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசிய ஆராய்ச்சி பிரிவில் நுால் மதிப்பாய்வு கூட்டம் நடந்தது. மாணவர் அருண் பாண்டியன் வரவேற்றார். கல்வி அலுவலர் நடராஜன் தலைமை வகித்தார். 'காந்தி தொகுப்பு நுால்கள் - பாகம் 16' எனும் நுாலை ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மதிப்பாய்வு செய்தார்.
சவுராஷ்டிரா தொழில்வர்த்தக சங்கத் தலைவர் தினேஷ், நுாலகர் ஜெயமேரி, மாணவர்கள் கலந்து கொண்டனர். உளவியல் ஆய்வாளர் நாகராஜ் நன்றி கூறினார். மியூசிய செயலாளர் நந்தாராவ் ஏற்பாடு செய்திருந்தார்.

