/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அர்ஜூன் சம்பத்துக்கு மதுரையில் பாராட்டு
/
அர்ஜூன் சம்பத்துக்கு மதுரையில் பாராட்டு
ADDED : நவ 13, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனியில் அனைத்து பிராமணர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சென்னையில் சமீபத்தில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆர்ப்பாட்டம், பேரணி நடந்தது. இதையடுத்து மதுரையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத்தை பிராமணர் சங்கங்களின் நிர்வாகிகள் பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ, மாநில துணைத் தலைவர் இல.அமுதன், மாவட்ட தலைவர் ரங்கராஜன், பிராமணர் சமாஜம் மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் ஸ்ரீராமன், பா.ஜ., மாநில விவசாய அணி துணைத் தலைவர் சசிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

