ADDED : ஜூன் 06, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் மே மாதம் பஸ்சில் பயணித்த மக்கள் யு.பி.ஐ., கியூ ஆர் கோடு, ஜி பே, போன்பே மூலம் பயண சீட்டு பெற்றுள்ளனர். இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் அதிக பயணசீட்டு வழங்கி வருவாய் ஈட்டிய நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மதுரை நகர் கிளை டெப்போ முத்துவேல், மதுரை புறநகர் சரவணன், திண்டுக்கல் 1ல் சுருளிராஜன், குமுளி பிஸ்வஜித், விருதுநகர் சிவகாசியில் மயில்ராஜ், பாக்கியராஜூக்கு மேலாண் இயக்குனர் இளங்கோவன் பரிசு வழங்கினார்.