sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரிட்டாப்பட்டி சுற்றுச்சூழலை அழித்து டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதா தொல்லியல் அறிஞர்கள் எதிர்ப்பு

/

அரிட்டாப்பட்டி சுற்றுச்சூழலை அழித்து டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதா தொல்லியல் அறிஞர்கள் எதிர்ப்பு

அரிட்டாப்பட்டி சுற்றுச்சூழலை அழித்து டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதா தொல்லியல் அறிஞர்கள் எதிர்ப்பு

அரிட்டாப்பட்டி சுற்றுச்சூழலை அழித்து டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதா தொல்லியல் அறிஞர்கள் எதிர்ப்பு


ADDED : டிச 28, 2024 01:50 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை, மேலுாரில் உள்ள அரிட்டாப்பட்டி சுற்றுச்சூழலை அழித்து டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் சாந்தலிங்கம், வேதாச்சலம் கூறியதாவது:

மதுரை, மேலுாரில் உள்ள கழிஞ்சமலையில் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன. இது ஒரு தொன்மையான சமணத்தலம். 7 - 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முற்காலப்பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட குடைவரை சிவன் கோவிலும் உள்ளது.

தமிழகத்தில் அரிதாக கிடைக்கப்பெற்ற லகுலீசர் சிற்பம் இங்கும் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்-ளது. 1,000 ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் பாதிரிக்குடி எனப்பட்டது. இம்மலையின் பெயர் திருப்பி-ணையன் மலை என்றும் இங்குள்ள தீர்த்தங்கரர் சிலையை செய்ய வைத்தவர் அச்சணந்தி என்ற சமண துறவி என்பதும் ஏற்கனவே தெரிந்த விஷயம். இந்த ஊரில் 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் அழிந்து விட்டதை அதன் கட்டுமான கற்கள், கல்வெட்டுகளால் அறியலாம். இந்த ஊர், ஐநுாற்றுப்பெருந்தெரு என்ற பெயரில் வணிகத்தலமாக இருந்ததை கல்வெட்டால் அறிய முடிகிறது. 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த திருமலை நாயக்கர் கால செப்-பேட்டில் காவல் முக்கியத்துவம், ராணுவ நடவடிக்கை போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரிட்டாப்பட்டிக்கு, 5 கிலோ மீட்டர் தொலைவில் மாங்குளம் என்றும் ஊரின் மலைக்குகையில் ஆறு தமிழி கல்வெட்டுகள் செதுக்கப்பட்டதை, 1882ல் ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவல் கண்டறிந்துள்ளார். மேலும் இக்கல்வெட்டில், 2,500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நெடுஞ்செ-ழியன் எனும் பாண்டிய மன்னன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மலையின் சுற்று வளாகத்தில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலவுகிறது. வரலாற்று முக்கியத்துவமும் பாரம்பரிய பெருமையும் நிறைந்த அரிட்டாப்பட்டியில் மத்திய அரசு டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயற்சிப்பதை எதிர்க்கிறோம்.

ஒருபுறம் வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் மத்திய அரசு, மது-ரையின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதை கண்டிக்கிறோம். அரிட்டாப்பட்டி, அதன் சுற்றுவட்-டாரப் பகுதிகளில் இத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us