/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெப்பக்குளம், திருத்தேர் மண்டபம் தொன்மையை பாதுகாக்க வேண்டும்: தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ADDED : நவ 27, 2025 05:39 AM
மதுரை: 'மதுரை கூடலழகர் கோயிலுக்கு சொந்தமான டவுன்ஹால் ரோடு தெப்பக்குளம், கோயிலுக்கு எதிரே உள்ள திருத்தேர் மண்டபத்தை பாதுகாத்து தொன்மை மாறாமல் சீரமைக்க வேண்டும்' என தொல்லியல் ஆர்வலர்கள், தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷன் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனரிடம் அளிக்கப்பட்ட மனு: இத்தெப்பக்குளம் நான்கு புறமும் கற்சுவராக கட்டப்பட்டு நான்கு திசைகளில் இருந்தும் படித்துறைகள் அமைக்கப்பட்டு நடுவில் நீராழி மண்டபத்துடன் காட்சியளிக்கிறது.
நானுாறு ஆண்டுகள் பழமையான இவற்றின் தொன்மையை பாதுகாக்க வேண்டும். இதற்காக 4 கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். படித்துறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர சீரமைக்க வேண்டும். நீராழி மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படிகளில் சேதப்பகுதிகளை சரிசெய்ய வேண்டும். கோயிலின் திருத்தேர் துத்தநாக தகடுகளால் மூடப்பட்டுள்ளது. இதை அகற்றி 'பைபர் கிளாஸ்' கொண்டு மூன்று புறமும் அடைக்க வேண்டும். அப்படி இருந்தால் சிற்பங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம்.
கோயிலுக்கு எதிரே மரத்தேரும், தேரை அலங்கரிக்க கட்டப்பட்ட மண்டபமும் பழமையானது. தற்போது இது வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இக்கடைகளை அகற்றி தொன்மையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.