/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூடலழகர் தெப்பத்தை நிரப்ப தீர்மானம்
/
கூடலழகர் தெப்பத்தை நிரப்ப தீர்மானம்
ADDED : நவ 27, 2025 05:40 AM

மதுரை: மதுரையில் தண்ணீர் தண்ணீர் பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனரும் தினமலர்இணை நிர்வாக ஆசிரியருமானடாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கோயில் இணை கமிஷனர் ஆகியோரிடம் மனு கொடுத்தல், நவ. 29 காலையில் பி.டி.ஆர்., மேம்பாலத்தில் இருந்து வண்டியூர் நான்கு வழிச் சாலை சந்திப்பு வரை வைகை வடகரையில் மரக்கன்றுகள் நடும் இடங்களை பார்வையிடுதல், டிச. 14ல் பொதுப்பணித்துறை அனுமதி பெற்று தேனுார் மண்டபம் அருகே மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் கண்ணன், அறிவழகன், ஆனந்தன், உச்சி மகாலிங்கம், ரவி, துரை விஜயபாண்டியன், அழகு, சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

