UPDATED : நவ 29, 2026 04:44 PM
ADDED : நவ 29, 2026 04:44 PM

அ நிறம் | அளவு
மேலுார்: மதுரையில் இந்தியன் யுனைடெட் டார்கெட் ஆர்ச்சரி அசோசியேஷன் சார்பில் தேசிய வில்வித்தை போட்டி நடந்தது.
இதில் மேலுார் போதிதர்மா ஏகலைவா பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 12 பேர் வெற்றி பெற்றனர். வென்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் செந்தில் போஜராஜன், துணைப் பயிற்சியாளர் ஜெயக்குமார், அசோசியேஷன் தலைவர் பால் பாண்டி, செயலாளர் விக்னேசன் பாராட்டினர்.
பேர்போவ் பிரிவில் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆதி சிவசுப்பிரமணியன், மித்ரன், விஷ்வா, விகாஷ், மித்ரஜித் முதல் பரிசு பெற்றனர். ஜேசுவா, எய்டன், வர்ணிகாஸ்ரீ, சமர்கிருஷ்ணா, நிரஞ்சனா, மிதுன்ராஜ், பட்டத்தரசி ஆகியோர் 2 ம் பரிசு பெற்றனர். மாணவர் ஜெயக்குமார் மூன்றாம் பரிசு பெற்றார்.
