/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
100க்கு மேல் மண் மாதிரி உள்ளதா?' பரிசோதனை வாகனம் தேடி வரும்
/
100க்கு மேல் மண் மாதிரி உள்ளதா?' பரிசோதனை வாகனம் தேடி வரும்
100க்கு மேல் மண் மாதிரி உள்ளதா?' பரிசோதனை வாகனம் தேடி வரும்
100க்கு மேல் மண் மாதிரி உள்ளதா?' பரிசோதனை வாகனம் தேடி வரும்
ADDED : டிச 01, 2024 01:50 AM
100க்கு மேல் மண் மாதிரி உள்ளதா?'
பரிசோதனை வாகனம் தேடி வரும்
ஈரோடு, டிச. 1-
'நுாற்றுக்கும் மேற்பட்ட மண் மாதிரிகளை பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தால், நேரில் வந்து பரிசோதித்து தருகிறோம்' என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, மூத்த வேளாண் அலுவலர் வசந்தி கூறியதாவது: ஈரோட்டில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், மண் பரிசோதனை நிலையம் செயல்படுகிறது. இங்கு நடமாடும் மண் பரிசோதனை வாகனமும் உள்ளது. ஒரு மண் மாதிரி அல்லது ஒரு தண்ணீர் மாதிரியை பரிசோதிக்க, 30 ரூபாய் கட்டணம். ஈரோடு மண் பரிசோதனை கூடம் சிறப்பாக செயல்பட்டதால், மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய அளவில், 50 நிலையங்களுக்கு இந்த அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.
ஓரிரு விவசாயிகளாக இருந்தால், அவர்களது மண், தண்ணீரை இங்கு எடுத்து வந்து பரிசோதனை செய்ய வேண்டும். அதேநேரம் ஒரே கிராமத்தில் அல்லது ஒரே பகுதியில், 100க்கும் மேற்பட்ட மண், தண்ணீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய விவசாயிகளே ஏற்பாடு செய்யலாம். அவ்வாறு செய்துவிட்டு, தகவல் தெரிவித்தால், நடமாடும் மண் பரிசோதனை கூட வாகனத்தை அழைத்து வந்து, அங்கேயே பரிசோதனை செய்வோம். இவ்வாறு கூறினர்.