/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேவர் பிளாக் ரோடு அளவீடு அதிகாரியுடன் வாக்குவாதம்
/
பேவர் பிளாக் ரோடு அளவீடு அதிகாரியுடன் வாக்குவாதம்
ADDED : நவ 07, 2025 04:19 AM
மேலுார்: உறங்கான்பட்டி ஊராட்சி தர்மசானபட்டியில் முத்து மாரியம்மன் கோயில் பின்பகுதியில் பாதி அளவிற்கு பேவர் பிளாக் கற்கள் பதிப்பதற்கு ஒன்றிய அலுவலக உதவி பொறியாளர்(ஏ.இ.,) பத்மநாபன் அளவீடு செய்தார். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பகுதி சிதம்பரம்: 130 மீட்டர் நீளமுள்ள ரோட்டில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க 70 மீட்டர் வரை உதவி பொறியாளர் அளவீடு செய்தார். முழுவதும் அமைக்குமாறு கூறினோம். நான் சொல்வதற்கு ஒத்து வந்தால் வேலை நடக்கும் . இல்லையென்றால் 'கேன்சல்' செய்து விடுவேன்' என ஒருமையில் மிரட்டினார். இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் கீழவளவு போலீசில் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
உதவி பொறியாளர் பத்மநாபன் கூறுகையில், நான் டென்ஷனாகி பேசும் அளவிற்கு நடந்து கொண்டார்கள். நான் நியாயமாக நடந்து கொள்வதால் கோபப்பட்டேன். பிறகு அகலத்தை குறைத்து ரோடு முழுவதற்கும் பேவர் பிளாக் பதித்து தருவதாக கூறி சுமூகமாக பிரச்சனையை முடித்துவிட்டேன். அதற்கு பிறகும் சிதம்பரம் என்பவர் நான் பேசியதை மனதில் வைத்துக்கொண்டு அவர் பேசியதை எடிட் செய்து விட்டு நான் பேசியதை மட்டுமே வீடியோவாக எடுத்து புகார் கூறியுள்ளார் என்றார்.

