/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில கபடியில் அரசு பள்ளி மாணவர்கள்
/
மாநில கபடியில் அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : நவ 07, 2025 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில கபடி போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025- -26ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. குறுவட்ட, மாவட்ட போட்டிகளில் வென்ற அணிகள் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளன. தாய் மெட்ரிக் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான கபடியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இதனையடுத்து திருச்சியில் நடக்கும் மாநில போட்டியில் வெற்றி பெற தலைமை ஆசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.

