/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பி.எஸ்.என்.எல்., உட்கட்டமைப்பு சேவையை மேம்படுத்த வேண்டும் ஆய்வுக் கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

ADDED : நவ 07, 2025 04:22 AM
மதுரை: 'மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல்., உட்கட்டமைப்பு, சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தொலைதொடர்பு ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
மதுரை தல்லாகுளம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் எம்.பி.,க்கள் வெங்கடேசன் (மதுரை), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), சச்சிதானந்தம் (திண்டுக்கல்) முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.
தொலைதொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அருள்செல்வன், அஜய் கோஷ், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை செயல்பாட்டு (ஓ.ஏ.,) பகுதியின் நிதி, செயல்திறன், உட்கட்டமைப்பு, 4ஜி பி.டி.எஸ்., செயல்பாட்டிற்கு வருதல், செறிவூட்டல் கோபுரங்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
எம்.பி.,க்கள் பேசியதாவது: தொலைதொடர்பு உட்கட்டமைப்பு, சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மலைப் பகுதிகளில் அலைபேசி இணைப்பு, நெட்வொர்க் கவரேஜை மேம்படுத்த வேண்டும்.
யு.எஸ்.ஓ., 4 ஜி செறிவூட்டல் திட்டத்தில் 4ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. மலைப் பகுதிகளில் 2ஜி அலைபேசி மொபைல் சேவை கிடைக்காதது கவலை அளிக்கிறது. அலைபேசி சேவையை பெறக்கூடிய வகையில் பட்டன் ஹேண்ட்செட்டை ஆதரித்து அந்த பகுதிகளில் 2ஜி அலைபேசி சேவையை வழங்க வேண்டும். வாடிக்கையாளர் புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கும் வழிமுறையை உருவாக்க வேண்டும் என்றனர்.