ADDED : அக் 05, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை : எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 50.
கட்டட தொழிலாளியான இவர் அக்.,2ல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், சக தொழிலாளியான அதே ஊரைச் சேர்ந்த முருகனுடன் 42, மது குடித்தபோது தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பினர். இதன் பிறகு முருகனின் வீட்டிற்கு இரவில் சென்று அவரை எழுப்பி மீண்டும் தகராறு செய்தார். ஆத்திரமுற்ற முருகன், கல்லை எடுத்து தாக்கியதில் சுப்பிரமணி இறந்தார். முருகன் கைது செய்யப்பட்டார்.