/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ்காரர் மீது வாகனம் ஏற்றியவர்கள் கைது
/
போலீஸ்காரர் மீது வாகனம் ஏற்றியவர்கள் கைது
ADDED : மார் 14, 2024 04:25 AM
மதுரை: மதுரை கூடல்புதுார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரர் மதுகுமார் 27. இவர் மார்ச் 11ல் இரவு மதுரை - அலங்காநல்லுார் ரோட்டில் எஸ்.எஸ்.ஐ.,க்கள் வேல்முருகன், சரவணன் ஆகியோருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியாக அதிவேகமாக வந்த டூவீலரை சோதனை செய்ய முயன்றார். வாகனத்தை ஓட்டி வந்தவர்கள், போலீஸ்காரர் மதுகுமார் மீது மோதி தப்பினர்.
இதில் மதுகுமார் தலை, இடது கை, 2 கால்களில் காயமடைந்தார். மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து கூடல்புதுார் போலீசார் கொலை முயற்சிஉள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மதுகுமார் மீது மோதி தப்பியவர்கள் பழங்காநத்தத்தைச் சேர்ந்த லோகேஷ் 20, கரிமேடு மேலபொன்னகரம் ராமர் 20, எனத் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

