ADDED : நவ 09, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கொங்கம்பட்டி தி.மு.க., பேச்சாளர் நாகராஜ் 60. இவரிடம் 2020 அக்.1 இரவு மூவர் போதையில் தகராறு செய்து கொலை செய்து தலைமறைவாயினர்.
இந்நிலையில் 2025 செப்.29ல் இடப்பிரச்னையில் நடந்த கொடுக்கம்பட்டி ஆசைதம்பி கொலை வழக்கில் 8 பேரை கீழவளவு போலீசார் கைது செய்தனர். இவர்களில் கீழவளவு பாரதிராஜா 24, ரேவந்த் 23, ஆகியோருக்கு கொங்கம்பட்டி நாகராஜ் கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவ்வழக்கிலும் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் நாகராஜ் கொலையில் தலைமறைவாக இருந்த பால்பாண்டியை 40, இன்ஸ்பெக்டர் சிவசக்தி கைது செய்தார்.

