ADDED : நவ 09, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழறிஞர் வீரமாமுனிவர் 346வது பிறந்தநாள் விழா கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.
தலைவர் எம்.எல்.ஏ.,இனிகோ இருதயராஜ் வழிகாட்டுதல்படி மதுரை பாத்திமா கல்லுாரி அருகில் உள்ள சிலைக்கு தென் மண்டலசெயலாளர்இம்மானுவேல் தனபாலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் காட்வின் முன்னிலை வகித்தார். அந்தோணி ராஜேந்திரன், பிரிட்டோ, அன்புராஜ், சாமுவேல்ராஜ், ஜான் மோசஸ் சாமுவேல், அந்தோணிராஜ், ராயப்பன், ராபர்ட், ஜோசப் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

