ADDED : செப் 14, 2025 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பைபாஸ் ரோட்டில் அப்சல் பைனான்ஸ் மற்றும் முதலீடு நிறுவனம் செயல்பட்டது. வீட்டு மனை வழங்குவது உட்பட பல்வேறு முதலீடு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து ரூ.பல கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நிறுவன இயக்குநர்கள் செந்தில்வேலு, செல்வகுமார், உமா, பாண்டியராணி, தாமோதரன், அருண்குமார், பாபுஜி, ஆவுடையப்பன், இசக்கி முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் மூவர் கைதான நிலையில், 14வது குற்றவாளியான திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் தங்கியிருந்த பாபுஜியை 54, எஸ்.பி., சரவணகுமார் உத்தரவுபடி, டி.எஸ்.பி., ராஜமுரளி தலைமையில் எஸ்.ஐ., ஆறுமுகம், ஏட்டு முத்துக்குமார் கைது செய்தனர்.