ADDED : ஜூலை 07, 2025 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ராஜ சியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி உற்ஸவ விழா ஜூன் 24ல் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை தீபாராதனை நடந்தது. நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு, மகா வராஹி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், யாகபூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, விளக்கு பூஜை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.