/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிய ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வீரர்களுக்கு மதுரையில் வரவேற்பு
/
ஆசிய ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வீரர்களுக்கு மதுரையில் வரவேற்பு
ஆசிய ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வீரர்களுக்கு மதுரையில் வரவேற்பு
ஆசிய ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வீரர்களுக்கு மதுரையில் வரவேற்பு
ADDED : ஆக 03, 2025 05:07 AM

அவனியாபுரம் : தென்கொரியாவில் நடந்த ஆசிய ரோலர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்கொரியாவில் ஜூலை 22 முதல் ஜூலை 30 வரை ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. லீக் முறையில் நடந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா உட்பட 13 நாடுகள் பங்கேற்றன.
ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டிகளில் இந்திய சீனியர் பெண்கள் அணியினர் தங்கப்பதக்கம் வென்றனர். சீனியர் ஆண்கள் அணியினர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். பெண்கள் அணியின் 12 வீராங்கனைகளில் மதுரையைச் சேர்ந்த 3 பேர், ஆண்கள் 12 பேரில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்திய அணியில் இடம் பெற்ற இவ்வீரர்கள் நேற்று டில்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தனர். அவர்களை பெற்றோர், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் பொருளாளர் ராஜு, பயிற்சியாளர்கள் அலெக்சாண்டர், பஸ்லுல் கரீம், சிவராமன், லெனின், நிரோஜன், வெங்கடேஷ் ஆகியோர் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.