/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரில் நாட்டு நாவல் பழம் சீசன்
/
பேரையூரில் நாட்டு நாவல் பழம் சீசன்
ADDED : ஆக 03, 2025 05:07 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக ஆந்திரா ஒட்டுரக ஜம்பு நாவல் பழங்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. தற்போது நாட்டு நாவல் பழங்களின் சீசன் துவங்கி உள்ளது.
ஆண்டுதோறும் கோடை காலம் நிறைவுபெறும் நிலையில் நாவல் மரங்களில் பூக்கள் உற்பத்தியாகி காய்கள் பிடிக்கத் தொடங்கும். ஆடி, ஆவணி மாதங்கள் நாவல் பழம் சீசன் காலம். பொதுவாக ஆடி மாதத்தில் அதிவேக காற்று வீசும் போது மரத்தில் பழுத்துள்ள நாவல் பழங்கள் கீழே உதிர்ந்து விழும். ரோட்டோர மரங்களில் இருந்து உதிர்ந்த பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேகரித்து உண்கின்றனர். சிலர் அவற்றை பறித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நாட்டு நாவல் பழம் கிலோ ரூ.200 வரை விற்பனையாகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.