sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


ADDED : மே 03, 2025 10:40 PM

Google News

ADDED : மே 03, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்க்கரை நோயாளிகள் உடலில் புண் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். அது ஏன்.

- சுமதி, மதுரை

சர்க்கரை நோயாளிகளின் காலில் புண்ணிற்கு முறையான சிகிச்சை செய்து குணப்படுத்தவில்லை என்றால் கால் விரல்களையோ காலையோ இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக கட்டுப்பாடில்லா ரத்த சர்க்கரையானது நரம்புகளை பாதிப்பதால் வலி உணர்வை இழக்க நேரிடும். இதனால் புண் ஏற்படுவதை அறியாத நிலையும் புண் ஆறுவதற்கான சூழ்நிலையும் பாதிக்கிறது. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய நரம்பு பாதிப்பு கால் வடிவமைப்பில் மாற்றம் செய்யக்கூடும். இதனால் காலில் புண் ஏற்படக்கூடும்.

கட்டுப்பாடில்லா ரத்த சர்க்கரையானது கால் ரத்த ஓட்டங்களை பாதிப்பதால் புண் ஆறுவதற்கு தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைகிறது. அதிக ரத்த சர்க்கரை புண் மற்றும் அதை சுற்றியுள்ள தசைகளில் கிருமிகள் வளர்வதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது.

- டாக்டர் சி.பி. ராஜ்குமார்சர்க்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ நிபுணர், தேனி

வயதானவர்களுக்கு முழங்கால் மூட்டு வலி அதிகமாக வருகிறது. இதை வராமல் தடுப்பது, வந்தால் குணப்படுத்தும் மருத்துவம் குறித்து கூறவும்.

- - ராமர், வடமதுரை

தற்போது 40, 50 வயது கடந்த பலர் கீல்வாதம் என்ற மூட்டு வலியால் அவதியுறுகின்றனர். எலும்பு, குறுத்தெலும்புகளில் சிறிது சிறிதாக சேதாரம் ஏற்பட்டதால் செயல் திறனை மூட்டு இழப்பதால் வலி, இறுக்கமாக பிடிப்பு, வரையறுக்கப்பட்ட இயங்கு திறன் குறைவு பிரச்னை ஏற்படுகிறது. முழங்கால் மட்டுமல்லாது, இடுப்பு, முதுகெலும்பு, முழங்கையையும் பாதிக்கும்.

மூட்டுகளின் தேய்மானம், வயதாகுதல், சிறுவயதில் ஏற்படும் காயங்கள், குடும்ப பாரம்பரியம் போன்றவை முக்கிய காரணங்களாகும். அதிகமாக நடந்தால் வலி ஏற்படுதல், காலை எழுந்தவுடன் அதிகமாக உணரப்படும் வலி சிறிது நடந்தால் குறைதல், மூட்டு பிடித்துக் கொள்ளுதல், மூட்டின் இயக்கத்திறன் குறைதல், வீக்கம் முக்கிய அறிகுறிகளாகும்.

முக்கிய மருத்துவ முறை என்பது நல்ல உடல் நலத்தை பேணுதல், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், நாள் பட்ட நோய்கள் வராமல் தடுத்தல், சீரான உடற்பயிற்சி, உடல் பருமன் ஏற்படாமல் சரியான எடையை பராமரித்தல் ஆகியவனவாகும்.

வலி அதிகமாக இருப்பின் டாக்டர் பரிந்துரையில் ஒரு சில வலி மாத்திரைகள் சிறிது நாட்கள் மட்டும் சாப்பிடலாம். மூட்டுக்கு எண்ணை தேய்த்து ஒத்தடம் கொடுப்பது உதவலாம். மூட்டுக்குரிய உடற்பயிற்சியும் அவசியம். சீராக தினமும் செய்யப்படும் மூட்டு வலிக்கு உண்டான பயிற்சிகள் சிறந்த தீர்வினை தரும். வலி குறைவதோடு மூட்டுப்பகுதி தசைகள் நன்றாக வலுப்பெற்றால் வலி அதிகமாகாது.

மிக அதிகமாக தேய்மானம் ஏற்பட்டிருந்தால் மூட்டு மாற்று சிகிச்சை வசதியும் உள்ளது.

மூட்டு வலி வராமல் பார்த்துக் கொள்ள சிறுவயது முதலே சுறுசுறுப்பாக இருத்தல், நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இல்லாமல் இருப்பது, சமச்சீரான உணவு, உடல் எடையை பராமரிப்பது, சரியான தோரணையில் அமர்வது, நோய் பற்றி நல்ல புரிதல் இருந்தால் வராமல் தடுக்கவும், வந்த பின்னும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும் முடியும்.

--டாக்டர் ஜே.சி.சேகர்பொதுநல மருத்துவர்வடமதுரை

கொழுப்பு கல்லீரல் நோய் வர காரணம் என்ன. ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கான சிகிச்சை உள்ளதா.

- -எஸ். கவிதா, சின்னமனுார்

உணவு பழக்க வழக்கங்களாலும், வாழ்வியல் முறை மாற்றத்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொழுப்பு கல்லீரல் பாதிப்பு உள்ளது. இது உடலில் உள்ள மற்ற உறுப்புக்களையும் பாதித்து நோய்கள் ஏற்பட காரணமாகிறது. அதிக உடல் எடை, ஆரோக்கியமற்ற கொழுப்பு அதிகமுள்ள உணவு உணவுகள் உட்கொள்ளுதல், துாக்கமின்மை, மது, புகை பிடித்தல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இதை குணப்படுத்த நடைப்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி, அதிக நார்ச்சத்துக்கள், புரத சத்து உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் துாங்க வேண்டும். பகல் துாக்கத்தை தவிர்க்க வேண்டும்.

ஆயுர்வேத டாக்டரின் பரிந்துரையில் மருந்துகளை உட்கொண்டால், கொழுப்பு கல்லீரல் நோயை எளிதாக குணப்படுத்தலாம்.

- டாக்டர் அஸ்மா நிஸ்ரின்ஆயுர்வேத மருத்துவர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம்இராயப்பன்பட்டி

எனது கழுத்து எலும்புகள் அடிக்கடி வலிக்கிறது. இதற்கான தீர்வு என்ன.

-ஆர்.கார்த்திகை செல்விராமநாதபுரம்

நமது வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்க வழக்கங்களால் சிறு வயதினருக்கு கூட நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. கழுத்து எலும்பு தேய்மானம் வயதானவர்களுக்குத்தான் வரும். கடினமாக பணி செய்பவர்கள், சுமைப்பணியாளர்களுக்கும், தொடர்ந்து அலைபேசி பார்ப்பதாலும், தொடர்ந்து கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கும் கழுத்து எலும்பு வலி ஏற்படுகிறது.

கழுத்தில் வலி இருப்பவர்கள் டாக்டர்களை அணுகி எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்பு இருந்தால் நமது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். சுமை பணியாளர்கள் சுமப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

அலைபேசி பார்க்கும் நேரம், கணினியில் பணி செய்யும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். பிசியோதெரபி சிகிச்சை செய்து கொள்ளலாம். வலியை குறைக்க தற்காலிகமாக மட்டும் நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கிழங்கு வகைகள் அதிகம் சாப்பிடலாம். இயற்கையான காய்கறிகள் அதிகம் உண்ண வேண்டும். உணவில் தினசரி கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், முட்டை போன்ற சத்தான உணவு உட்கொள்ளலாம்.

- டாக்டர் வ.து.ந.மதிவாணன் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

-கோடை வெப்பத்தில் இருந்து சருமத்தை காக்க சன் கிரீம் பயன்படுத்தலாமா.

- -அ.ராஜா, சிவகங்கை

வறட்சி தோலா, எண்ணெய் தன்மை அதிகம் கொண்டதா என்பதை தோல் மருத்துவர் ஆலோசனை பெற்று சன் கிரீமை பயன்படுத்தவும். குளித்து விட்டு முகத்தில், முன் கழுத்து, பின் கழுத்து வெளிப்புற கைகளில் பூசிக்கொள்ளலாம். கிரீம் பூசிய 20 நிமிடம் கழித்து தான் வெளியே செல்ல வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு பிறகு வெளியே இருக்கும் சூழ்நிலையில் சன் கிரீமை மறுபடியும் பூசி கொள்ள வேண்டும். சன் கிரீமை முறையாக பயன்படுத்தினால் தோலில் உள்ள நீர் சத்து பாதுகாக்கப்படும். சூரிய கதிர்களால் ஏற்படும் அலர்ஜி, தோல் கருமை, சுருக்கம், சரும கோளாறுகளில் இருந்து பாதுகாக்கலாம். வெயில் மற்றும் குளிர்காலத்திலும் சன் கிரீமை பயன்படுத்தலாம்.

--டாக்டர் முனிராஜ்தோல் நோய் சிறப்பு மருத்துவர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை

எனக்கு 52 வயது ஆகிறது. கடந்த சில மாதங்களாக பாத எரிச்சல், கால் வீக்கம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.

- -சுப்பிரமணியன்ஸ்ரீவில்லிபுத்துார்

அதிக நேரம் நின்று வேலை செய்யும் பெரும்பாலானவர்களுக்கு கால் வீக்கம் வரும். சர்க்கரை சத்து உள்ளவர்களுக்கு பாத எரிச்சல் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை சத்து, இதயம், சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பழங்கள், கீரைகள் உணவில் சேர்ப்பது அவசியம்.

- - டாக்டர் சந்திரசேகரன்சித்த மருத்துவர்ஸ்ரீவில்லிபுத்துார்






      Dinamalar
      Follow us