sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டாக்டரை கேளுங்கள் ...

/

டாக்டரை கேளுங்கள் ...

டாக்டரை கேளுங்கள் ...

டாக்டரை கேளுங்கள் ...


ADDED : ஜூன் 15, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சைனஸ் என்பதும் அலர்ஜி என்பதும் வெவ்வேறா... வெளியில் செல்லும் போது ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்.

- -கவிமுகில், மதுரை

மூக்கில் இரண்டு பிரச்னைகள் வரும். அலர்ஜி என்பது பல்வேறு காரணங்கள், மரபணு காரணங்களால் ரத்தத்தில் வருகிறது. டாக்டர்கள் தான் சைனஸ், அலர்ஜியை வேறுபடுத்தி கண்டுபிடிக்க முடியும். சைனஸ் பாதிப்பா அல்லது அலர்ஜியா என்பது தெரியாமல் சுயமாக சிகிச்சை செய்யக்கூடாது. சைனஸ் என்பது நாள்பட்ட நோய். மூக்கு அடைபட்டு சதை வீங்கி எலும்பு வளைந்து சளி முற்றி வரும். மூக்கு, தொண்டையில் சளி சேர சேர பழுத்து சைனஸில் முடிகிறது.

மூக்கில் உள்ள இரு துவாரங்களும் சரியாக இருந்தால் வெளியில் இருந்து வரும் கிருமிகள் தடுக்கப்பட்டு தொண்டைக்கு சுத்தமான காற்று செல்லும். மூக்கில் தண்டு வளைந்திருந்தாலோ, சளியால் அடைத்திருந்தாலோ காற்றின் மூலம் வரும் கிருமிகள் அங்கு புகுந்து விடும். துாசியும் சேரும் போது நாளாக நாளாக அது கெட்டநீராக மாறி சளியாகி சைனஸ் ஆகிறது.

நம் உடலின் இதயத்திற்கு இணையான முக்கியமான பகுதி மூக்கு. சுவாசிக்கும் போது மோசமான, அசுத்தமான காற்றை மூக்கில் உள்ள நுண்ணிய பகுதி சுத்திகரித்து நுரையீரலுக்கு அனுப்புகிறது. இல்லாவிட்டால் நமது உடலில் கிருமிகள் நிறைந்துவிடும். மூக்கை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். மூக்கின் உள்ளே செல்லும் கிருமிகளை குறைக்கவும் தடுக்கவும் தான் முகக்கவசம் அணிகிறோம். எனவே வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவதே நல்லது.

- டாக்டர் எஸ். சரவணமுத்துகாது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், மதுரை

50 வயதிற்கு மேல் ஏற்படும் தொடர் தோள்பட்டை வலிக்கும் ஜவ்விற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா

-- குப்புசாமி, ஒட்டன்சத்திரம்

தோள்பட்டை எலும்பின் தலைப்பகுதி தசை, ரொட்டேட்டர் கப் எனும் தசை நாண் என பல ஜவ்வின் உதவியுடன் செயல்படுகிறது. ரொட்டேட்டர் கப் தசை நாண் தோள்பட்டையின் முக்கிய அசைவுகளுக்கு உதவி செய்கிறது. வெகு நாட்களாக அதிக எடை சுமப்பதாலோ, கையை தலைக்கு மேல் உயர்த்தி வேலை செய்வதாலோ, விபத்தின் மூலம் தோள்பட்டைக்கு காயம் ஏற்படுவதாலோ ரொடேட்டர் கப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டு அது தொடர் வலியாக மாறுகிறது. இப்பாதிப்பு பொதுவாக 50 வயதை கடந்தவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர் வலியாகவும், தோள்பட்டை முழுமையாக செயல்படுவதற்கு இடையூறாகவும் இருக்கிறது. இந்த பாதிப்பை பார்சியல் ரொட்டேட்டர் கப் டியர் எனக்கூறுவர். ஓய்வு எடுப்பதாலும் வலி நிவாரணி மருந்துகளாலும் பிசியோதெரபி செய்வதாலும் இதை குணமாக்கலாம்.

--டாக்டர் வி.ஆர். சரவண பிரியன் எலும்பியல் நிபுணர்ஒட்டன்சத்திரம்

ஐந்து வயதுக்கு கீழ் உள்ளகுழந்தைகளுக்கு சளி, இருமல் எதனால் வருகிறது. இவை வராமல் தடுப்பது எப்படி.

- -ரஞ்சிதம், போடி

புகை பிடிப்பவர்கள், சளி, இருமல், காச நோய் உள்ளோர் குழந்தைகளை தூக்கி முத்தம் கொடுப்பதன் மூலம் பரவுகிறது. இதனை தடுக்க குழந்தைகள் அருகே இருமல், தும்மல் கூடாது. கைகளை நன்கு கழுவிய பின்பு குழந்தைகளை துாக்க வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சளி, மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் ஏற்பட்டால் குறைந்தது 10 கிலோ எடை உள்ள குழந்தைகளுக்கு 120 மி.கி., பாரசிட்டமால் மாத்திரை 5 மணி நேரத்திற்கு ஒருமுறை வீதம் இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் சளி டானிக் கொடுக்கலாம். இருமல், இளைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், பால் குடிக்காமல் இருப்பது, சுணக்கம் ஏற்படுவது இருந்தால் டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தது முதல் 5வயது வரையிலான குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய ப்ளூ ஊசி, நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவ அடிப்படையில் துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிதளவு கொடுப்பதன் மூலம் எதிர்ப்பு சக்தி மட்டும் இன்றி சளி, இருமல், காய்ச்சல் வருவதை கட்டுப்படுத்தலாம்.

- -டாக்டர் எஸ்.ரவீந்திரநாத்

தலைமை மருத்துவ அதிகாரி

அரசு மருத்துவமனை, போடி

வாந்தி, வயிற்று வலி, நீர் கடுப்பு, காய்ச்சலால் அவதிப்படுகிறேன். இதற்கான தீர்வு என்ன.

-என்.ரஞ்சித், ராமநாதபுரம்

பொதுவாக கோடை காலத்தில் உடலில் நீர் சத்து குறைவு ஏற்படும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படும். கடும் வெப்பத்தாலும், வெப்பமான இயந்திரங்களை இயக்குபவர்களுக்கும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும். இதனால் வாந்தி, வயிற்று வலி, நீர் கடுப்பு, காய்ச்சல் ஏற்படலாம். அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிப்பை ஸ்கேன் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். சிறியதாக 10. மி.மீ.,க்கு குறைவான கற்கள் என்றால் மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம். பெரிதாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.

-டாக்டர் எம்.முல்லைவேந்தன், அறுவை சிகிச்சை நிபுணர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

கர்ப்ப கால நீரிழிவு நோய் உள்ள பெண்கள் பிரசவ சிக்கலை எப்படி தவிர்க்கலாம்

- -அ.கற்பகம், சிவகங்கை

கர்ப்ப காலத்தில் ரத்த சர்க்கரை அளவை கவனமாகக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கர்ப்பம் முழுவதும் சர்க்கரை அளவைச் சீராக வைப்பதன் மூலம் குழந்தையின் எடை அளவுக்கு அதிகமாகாமல் தடுக்கலாம். மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மகப்பேறு டாக்டர், நீரிழிவு சிறப்பு டாக்டருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது கர்ப்பிணியின் ஆரோக்கியத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் கண்காணிக்க உதவும். சீரான உடற்பயிற்சி நல்லது. மிதமான நடைப்பயிற்சி டாக்டர் பரிந்துரைக்கும் பயிற்சி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் உதவும். சரியான உணவுப் பழக்கம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்தின்போதும் அதற்குப் பின்னரும் கர்ப்பிணிகள் ரத்த சர்க்கரை அளவை மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். பிரசவத்தின்போது ஏற்படும் மன அழுத்தம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

- -டாக்டர் நபீஷா பானுவட்டார மருத்துவ அலுவலர்மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை

எனது வயது 36, கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாக தகவல்கள் வருகிறது. எனக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை எடுத்து நான்கு மாதங்கள் ஆகிறது. இதனால் எனக்கு பாதிப்பு அதிகம் இருக்குமா. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன.

- -சங்கர், ராஜபாளையம்

தற்போது பலருக்கும் சாதாரண சளி காய்ச்சல் என்கிற அளவில் தொற்று குணமடைந்து வருகிறது. சிறு வயது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள சிறுவர்கள், பல்வேறு இணை நோய் கொண்டோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், முதியோர் போன்றவர்களுக்கு தொற்று தீவிரமாக ஏற்படும். பொது இடங்களில் மாஸ்க், சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பழைய நடைமுறை தவறாமல் பின்பற்றுவதுடன் மூன்று நாட்களுக்கு மேல் தீவிர காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் தெரிந்தாலே உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்.

மேற்கத்திய நாடுகளைப் போல இங்கும் 'ப்ளூ' வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

- டாக்டர் கு.கணேசன்பொது மருத்துவர்ராஜபாளையம்






      Dinamalar
      Follow us