UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:06 PM
எனது அண்ணன் மகன் கட்டட தொழிலாளி. பல ஆண்டுகளாக வாயில் புகையிலை ஒதுக்கும் பழக்கமுடையவர். இதனால் சமீபகாலமாக அவரது தொண்டையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. நாக்கில் சுவையின்மை, பேச்சு தடுமாறுகிறது. டாக்டரிடம் காண்பிக்காமால், சமூக வலைதளங்களில் டாக்டர் என கூறும் ஒருவரின் பேச்சை நம்பி தன்னிச்சையாக சிகிச்சை எடுக்கிறார். இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும், வீக்கம் குறையாமல் பெரிதாகிறது. புற்றுநோயாக இருக்குமோ? என ஐயம் ஏற்பட்டுள்ளது.
- சன்னாசி, பெரியகுளம்.
உங்கள் அண்ணன் மகன் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளார். அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் வீக்கத்திற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். அதற்கு அவர் அறியாமையிலிருந்து விலகி முதலில் மருத்துவமனைக்கு வர வேண்டும். சமூக வலைதளத்தில் உலாவரும் போலியான டாக்டர் பேச்சைக் கேட்டு, வீக்கத்தை பெரிதாக்கி நோய் முற்றுவதற்கு வழி வகுக்க வேண்டாம். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் ரகசியம் காக்கப்படும். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் குணமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். தாமதம் செய்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
- டாக்டர் பாரதி,
புற்றுநோய் சிகிச்சை நிபுணர்
மாவட்ட அரசு மருத்துவமனை
பெரியகுளம், தேனி
