தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/டாக்டரை கேளுங்கள்....

டாக்டரை கேளுங்கள்....

டாக்டரை கேளுங்கள்....


UPDATED : அக் 10, 2026 04:27 AM

ADDED : அக் 10, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 04:27 AM ADDED : அக் 10, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எனது தாயாருக்கு காலையில் எழுந்தவுடன் கண்ணில் இருந்து நீர் வடிகிறது. அடிக்கடி கண்கள் சிவப்பாகின்றன. மருந்தகத்தில் மருத்து மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார். இப்பிரச்னைக்கு தீர்வு கூறுங்கள்.

எஸ்.கவிதா, தேனி

கண்களில் உள்ள நீர் இருப்பு குறைந்தால் இதுபோன்ற கண் பிரச்னை ஏற்படலாம். வறண்ட கண்கள் என இதை கூறுவோம். உறங்கும்போது கண்களுக்கு போதிய ஈரப்பதம் கிடைக்காமல் இருந்தால், கண்ணீர் சுரப்பி முறையாக வேலை செய்யவில்லை என்றால் இதுபோன்ற பிரச்னை ஏற்படும். உடல் சூடு காரணமாகவும் இப்பிரச்னை சிலருக்கு ஏற்படலாம். வெயிலில் வேலை செய்பவர்கள், நீண்ட நேரம் வாகனங்களில் செல்பவர்களுக்கு கண்களில் துாசி விழுந்து சிவக்கும். இமைகளின் ஓரங்களில் அலர்ஜி ஏற்பட்டு கண்கள் சிவக்கும் வாய்ப்பு உள்ளது. கண்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். உடல் சூட்டை குறைக்க நீண்ட நேரம் குளிப்பது, நீர் உணவு பொருட்கள் சாப்பிட்டால் கண்கள் பாதிப்பை குறைக்கலாம்.

டாக்டர் கணபதி, கண் பிரிவு தலைவர்,

அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us