தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள்

சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள்

சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள்


UPDATED : அக் 10, 2026 04:27 AM

ADDED : அக் 10, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 04:27 AM ADDED : அக் 10, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு அடிக்கடி உடலில் அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜியை எதிர்கொள்வது எப்படி

-கணேசன், மதுரை

அல்ர்ஜி பாதிப்பு பலகோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மூக்கினை பாதித்து தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், கண்களில் நீர்வடிதல், அரிப்பு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுவர். இருமல், சளி, மூச்சுத்திணறல், இளைப்பு (சுவாசிக்கும் போது விசில் சத்தம்), நெஞ்சு இறுக்கம், மழைக்காலங்களில் சளி, இருமலால் பாதிக்கப்படுவர்.

சிலநேரங்களில் தோலில் அரிப்பு, தடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அலர்ஜி பாதிப்பை ஐ.ஜி.இ., ஈசினோபில் எண்ணிக்கை போன்ற ரத்தப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம்.

எந்தெந்த பொருட்களால் உங்களுக்கு அலர்ஜி உண்டாகிறது என்பதை

ரத்தப்பரிசோதனை அல்லது ‘ஸ்கின் ப்ரிக்’ பரிசோதனை மூலம் அறியலாம்.

அலர்ஜி உண்டாக்கும் பொருளை கண்டறிந்து அதை தவிர்த்தால் அலர்ஜியின் பாதிப்பை குறைக்கலாம். துாசி, மகரந்தத் துகள்கள், அழகு சாதன பொருட்கள், நறுமணங்கள், ஹேர்டை, வாசனை திரவியங்கள், கொசுவர்த்தி, வீட்டில் கரப்பான் பூச்சி, நாய், பூனையின் முடி, தோலில் உள்ள ‘அலர்ஜன்’ போன்றவை அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள். பலருக்கு பழங்கள், இறைச்சி, கடல் உணவுகள், காய்கறிகளும் அலர்ஜியின் காரணங்களாக இருக்கும் .

– டாக்டர் பி.பிரேம் ஆனந்த், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us