UPDATED : அக் 10, 2026 05:41 PM
ADDED : அக் 10, 2026 05:37 PM
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது.
–எஸ்.முனியசாமி திருப்புல்லாணி.
ஒன்றரை மாதம் முதல் 4 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த சொட்டு மருந்து கொடுப்பதனால் குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. அசுத்தமான தண்ணீரை பருகுவதால் டயேரியா வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை உடனடியாக சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது புட் பாய்சன் ஏற்பட்டு உடலுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுகிறது. எனவே அன்றே சமைத்து அன்றே சாப்பிடுவது சாலச்சிறந்தது.
குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். குளோரினேசன் செய்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தற்போது மழைக் காலம் துவங்க உள்ளதால் தண்ணீரின் மூலமாக வரக்கூடிய நோய்களை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை வழங்குவதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க முடியும்.
–டாக்டர் பிரதீப், வட்டார மருத்துவ அலுவலர், திருப்புல்லாணி.
