தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/‘ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் மத்திய அரசு’

‘ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் மத்திய அரசு’

‘ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் மத்திய அரசு’


UPDATED : அக் 10, 2026 05:41 PM

ADDED : அக் 10, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 05:41 PM ADDED : அக் 10, 2026 05:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ‘‘பல்வேறு திட்டங்களின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுகிறது,’’ என மதுரையில் மடீட்சியா நடத்திய ‘மடிகான் எம்.எஸ்.எம்.இ., 3.0’ கருத்தரங்கில் வர்த்தகம், வங்கியியல் நிபுணர் சேதுராமன் சாத்தப்பன் பேசினார்.

அவர் பேசியதாவது:

இந்தியாவில் 1990 களில் ஐ.டி., துறையின் அலை வீசத் துவங்கியபோது லட்சக்கணக்கான இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு பதிலாக வேலைவாய்ப்பு பெற்றனர். இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை உலக நாடுகளை விட அதிகமாக இருந்தாலும் வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையே தொடர்கிறது. 2016 ல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒவ்வொரு நிறுவனமும் 10 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு வழங்கியது. புதுமையான சிந்தனைகளை வணிகமயமாக்குவதே ஸ்டார்ட் அப் வேலை. பலசரக்கு, ஸ்டேஷனரி கடைகள் இந்த எல்லைக்குள் வராது. அதுவே ஆன்லைன் விற்பனையாக மாறினால் ஸ்டார்ட் அப் நிறுவனமாகி விடும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.200 கோடி அளவிற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. மத்திய அரசின் ‘அடல்’ புதுமை திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லுாரிகளில் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். சிட்பி வங்கி மூலம் ரூ.10ஆயிரம் கோடி நிதி உருவாக்கப்பட்டு 4718 நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்பட்டது. பெண் தொழில்முனைவோர், எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் துவங்க கடன் வழங்கப்படுகிறது.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் (டி.பி.ஐ.ஐ.டி., ) துறை, மத்திய அரசின் பொது கொள்முதல் தளமான ஜெம், இ–டெண்டர் போர்ட்டலில் ஏலம் எடுப்பதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனவங்களை அங்கீகரித்துள்ளது.

இந்தியாவில் ஏழு லட்சத்து 36 ஆயிரத்து 830 பேர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பதிவு செய்துள்ளனர். அதில் டி.பி.ஐ.ஐ.டி., துறை 2 லட்சத்து 36 ஆயிரத்து 160 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது. 58 ஆயிரத்து 277 பெண்கள் ஸ்டார்ட் அப்பில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் 2023 ல் ‘ஸ்டார்ட் அப் அன்ட் இன்னோவேஷன்’ பாலிசி உருவாக்கப்பட்டு 2023 – 2028 வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 15 ஆயிரத்து 676 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us