/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கேட்டது ஒண்ணு; கிடைச்சது ஒண்ணு விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீட்டில் குழப்பம்
/
கேட்டது ஒண்ணு; கிடைச்சது ஒண்ணு விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீட்டில் குழப்பம்
கேட்டது ஒண்ணு; கிடைச்சது ஒண்ணு விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீட்டில் குழப்பம்
கேட்டது ஒண்ணு; கிடைச்சது ஒண்ணு விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீட்டில் குழப்பம்
ADDED : ஏப் 18, 2025 06:29 AM
மதுரை: மதுரையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களின் விருப்பத்திற்கு மாறாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மதுரையில் சி.இ.ஓ.ஏ., பள்ளி, கருமாத்துார் கிளாரட் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு முகாமில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக தேர்வு துவங்கிய 2வது நாளிலேயே விருப்ப அடிப்படையில் முகாம் தேர்வு செய்து ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஒதுக்கீடு உத்தரவுகளில் பெரும்பாலாலும் முகாம் மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏப். 21 ல் முகாம் துவங்கும் நிலையில் ஆசிரியர்களிடையே இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏப்.21 முதல் 28 வரை விடைத்தாள் திருத்தும் முகாம் நடக்கிறது. ஒரு பாடத்திற்கு 120 ஆசிரியர்கள் தேவை. அதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தனித்தனியே உத்தரவு அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவ காரணங்களுக்காக சிலர் விலக்கு கேட்டுள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முகாம் துவங்கும் நாளில் அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். தகுதியுள்ள ஆசிரியர்களை போதிய எண்ணிக்கையில் தேர்வு செய்த பின் பிறர் விடுவிக்கப்படுவர் என்றார்.
இந்நிலையில், 'பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர பிறர் ஏன் முகாம் துவக்க நாளில் பங்கேற்க வேண்டும். இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்' என ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.