நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்; சட்டசபை அவைக் குழு தலைவர் பரந்தாமன் எம்.எல்.ஏ., உறுப்பினர்கள் சரவணன், சிவகாமசுந்தரி, நிவேதா, பொன்னுச்சாமி, முருகேசன், ராமலிங்கம், செந்தில்குமார், தமிழ் செல்வம், நல்லதம்பி, பண்ணாரி, ராஜமுத்து, ஜெயசீலன், ராஜகுமார் ஆகியோர் கலெக்டர் பிரவீன் குமார் தலைமையில் திருப்பரங்குன்றத்தில் ரூ. 80 லட்சத்தில் எம்.எ.ல்ஏ., அலுவலகம் கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பரந்தாமன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'தற்போதுள்ள எம்.எல்.ஏ., அலுவலக கட்டடம் அகற்றப்பட்டு, அங்கு ரூ. 80 லட்சத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட உள்ளது. நான்கு மாதத்தில் பணிகள் நிறைவடையும்' என்றார்.
பின்னர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,வுடன் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.