நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார்.
பொருளாளர் வசந்த முனியம்மாள் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாநிலத்தலைவர் ராஜசேகரன், பொருளாளர் பெரியசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ், நிர்வாகி முத்துவேல் கலந்து கொண்டனர். கோட்டச் செயலாளர் செந்தில் நன்றி கூறினார். மாவட்ட தலைவராக கார்த்திகா, செயலாளராக ஜெயபால், பொருளாளராக வசந்த முனியம்மாள், இணைச் செயலாளராக முருகேஸ்வரி, மதுரை, திருமங்கலம் கோட்ட செயலாளராக ஸ்ரீகாந்த், செந்தில் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வாகினர்.