ADDED : செப் 12, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் ஆலவாய் லயன்ஸ் சங்க இயக்குநர்கள் கூட்டம் தலைவர் விஜய் தலைமையில் நடந்தது.
செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரவி சுந்தரராஜன் வரவேற்றார். பி.ஆர்.ஓ., முத்துக்குமார், முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், கணேஷ், அய்யாக்கனி, ராஜசேகர், பாலாஜி ஆகியோர் சேவை திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
முன்னாள் தலைவர் சுந்தரராஜன் நன்றி கூறினார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
