ADDED : செப் 12, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தென்பழஞ்சி கிராமத்தில் சில மாதங்களாகவே குடிநீர் பிரச்னை இருக்கிறது.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை எனக்கூறி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று திருப்பரங்குன்றம் – -நாகமலை புதுக்கோட்டை ரோட்டில் ஒருமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அதுவரை தற்காலிகமாக லாரிகள் மூலம் தினமும் குடிநீர் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
