ADDED : ஆக 26, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: மதுரை வடக்கு தாலுகா பிள்ளையார் நத்தம் வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
பல்வேறு சான்றிதழ்கள் பெற கிராம மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். அலுவலகத்தின் உட்பகுதி மேற்கூரையில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து உள்ளது. மழை நேரங்களில் ஈரப்பதமாக, நீர் கசிவு ஏற்படுகிறது. ஆவணங்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. கட்டடம் கட்டி 20 ஆண்டுகளை கடந்து விட்டது.
இதுவரை முறையாக பராமரிக்கவில்லை. கட்டட வெளிப்பகுதி சிலாப்பின் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. அலுவலக கட்டடத்தால் விபரீதம் ஏற்படுமோ என, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கட்டடத்தை பராமரிக்க அல்லது புதிதாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.
