/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி வீரர் மரணம்
/
ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி வீரர் மரணம்
ADDED : மார் 17, 2025 02:00 AM

அலங்காநல்லுார்: மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் கீழக்கரையில் ஏறு தழுவுதல் அரங்கம் துவங்கிய பின், அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில், சட்டசபை தொகுதி வாரியாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மேலுார் தொகுதி சார்பாக நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது; மூர்த்தி துவக்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஆர்.டி.ஓ., சங்கீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலுார் தொகுதியை சேர்ந்த 1,049 காளைகள், 550 வீரர்கள் களம் கண்டனர். இதில், வெற்றி பெற்ற காளை, வீரர்களுக்கு வழக்கம் போல சைக்கிள், அண்டா, மெத்தை பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் காயமடைந்த 70 பேரில் 20 பேர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போட்டியில் காளை முட்டியதில் சோழவந்தான் அடுத்த கச்சிராயிருப்பு மாடுபிடி வீரர் மகேஷ்பாண்டி, 23, இறந்தார்.