/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அதிருத்ர மகா யக்ஞம் துவக்கம்
/
மதுரையில் அதிருத்ர மகா யக்ஞம் துவக்கம்
ADDED : டிச 18, 2024 05:33 AM
மதுரை : மதுரை மகா ருத்ர மகா யக்ஞ கமிட்டி சார்பில் இந்த ஆண்டிற்கான அதிருத்ர மகாயக்ஞம் நேற்று துவங்கியது. உலக நன்மைக்காகவும், தேசம் வளமாக இருக்கவும் வேண்டி 150 வேத விற்பன்னர்களை கொண்டு லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ரித்விக்குகள் வரவேற்புடன் நிகழ்ச்சி துவங்கியது.
டிச.27 வரை தினமும் காலை 8:30 மணிக்கு ஸ்ரீருத்ர ஜபம் துவங்கும். மதியம் 12:00 மணிக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்படும். டிச. 28 மதியம் 1:00 மணிக்கு வஸோர்தாரா, பூர்ணாகுதி ேஹாமம் நடக்கிறது.
டிச.29 பிராம்மண சந்தர்ப்பனையுடன் விழா நிறைவு பெறுகிறது. துவக்க விழாவையொட்டி காஞ்சி காமகோடி மடம் சார்பில் ஆசீர்வாத பிரசாதத்தை திருவானைக்காவல் சங்கர மடம் நிர்வாகி ஸ்ரீபிரசாத், மதுரை மடத்தின் நிர்வாகிகள் ஸ்ரீகுமார், வெங்கடேசன் வழங்கினர்.
டிச. 21வரை தினமும் மாலை 6:30 மணிக்கு மகாபாரதத்தில் இருந்து விடையில்லா கேள்வியும், விளக்கமான பதிலும் என்ற தலைப்பில் எம்.வி.அனந்த பத்மாச்சார்யார் சொற்பொழிவாற்றுகிறார். டிச. 22ல் சுசித்ரா பாலசுப்பிரமணியன் குழுவினரின் ஹரிகதா, டிச.23ல் பெரியபுராணம் காட்டும் பாதை என்ற தலைப்பில் மணிகண்டன் பேசுகின்றனர். ஏற்பாடுகளை மகாருத்ர மகாயக்ஞ கமிட்டியினர் செய்துள்ளனர்.