UPDATED : அக் 12, 2026 07:54 PM
ADDED : அக் 12, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அனுப்பானடி பொன்னுப்பிள்ளை தோப்பில் நேற்று காலை வார்டு 89 மாநகராட்சி உதவிபொறியாளர் சிவசங்கரி களஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அப்பகுதி சகோதரர்கள் செல்வகுமார் 25, செந்தில்குமார் 23, ஆகியோர் சிவசங்கரி டூவீலரை இடித்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற அவர்கள் சிவசங்கரியை தாக்கினர். இருவரையும் சிந்தாமணி எஸ்.ஐ., ஜெயகுமார் கைது செய்தார்.
