ADDED : அக் 09, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : கள்ளிக்குடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜ்குமார் 28. இவர் கள்ளிக்குடி சர்வீஸ் ரோட்டில் உள்ள டீக்கடையில் நேற்று டீ குடிக்கச் சென்றார். அப்போது அதே கடைக்கு சென்னம்பட்டி ராஜேஷ் கண்ணன், குராயூர் பிரேம்குமார் ஆகியோரும் வந்தனர்.
அவர்கள் வாங்கிய பொருட்களுக்கு கடைக்காரரின் அலைபேசியில் உள்ள ஜி பேயில் பணம் அனுப்பியதாக கூறினர்.
அந்தப் பணம் அக்கவுண்டிற்கு வந்துவிட்டதா என பார்த்துச் சொல்லும்படி கடைக்காரர் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார்.
ராஜ்குமார் கடைக்காரரின் அலைபேசியை எடுத்து பார்த்தார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் கண்ணன், பிரேம்குமார் இருவரும் ராஜ்குமாரை அடித்து உதைத்துள்ளனர். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.