ADDED : அக் 10, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் பஸ் கண்டக்டர் பேரையூர் மீனாட்சிபுரம் கருப்பசாமி 43. நேற்று முன்தினம் திருமங்கலத்தில் இருந்து மதுரை பெரியாருக்கு செல்லும் பஸ்ஸில் திருநகருக்கு டிக்கெட் கேட்டு இருவர் ரூ.500 கொடுத்தனர்.
'சில்லரை இல்லை' என கருப்பசாமி தெரிவிக்க வாக்குவாதம் ஏற்பட்டது. மறவன்குளம் அருகே கருப்பசாமியை தாக்கி விட்டு ஸ்பீடு பிரேக்கரில் பஸ் மெதுவாக சென்றபோது இறங்கி மறவன்குளம் கண்மாய்க்குள் ஓடி தப்பினர். மண்டையில் காயமுற்ற கருப்பசாமி சிகிக்சை பெறுகிறார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

