/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை துணை மேயர் ஆபீஸ் மீது தாக்குதல்
/
மதுரை துணை மேயர் ஆபீஸ் மீது தாக்குதல்
ADDED : ஜன 09, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,:மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் அருகே துணைமேயர் நாகராஜன், 49, வீடு, அலுவலகம் அடுத்தடுத்து உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர், நேற்று மாலை, 6:30 மணிக்கு அலுவலகத்தில் இருந்தார். அப்போது, ரவுடிகள் இருவர் சத்தம் போட்டவாறு ஆயுதங்களுடன் வந்தனர்.
இதை கவனித்த நாகராஜன், உடனடியாக வீட்டிற்குள் ஓடிச்சென்று பதுங்கிக் கொண்டார். அங்கு வந்த அந்த ரவுடிகள், ஆயுதங்களால் அலுவலக கண்ணாடி, நாகராஜனின் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தி தப்பினர்.
ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் விசாரணையில், தாக்குதல் நடத்தியது அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், முகமது இஸ்மாயில் எனத் தெரிந்தது; அவர்களை தேடி வருகின்றனர்.

