/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒருமையில் பேசிய அமைச்சரின் உருவ பொம்மை எரிக்க முயற்சி
/
ஒருமையில் பேசிய அமைச்சரின் உருவ பொம்மை எரிக்க முயற்சி
ஒருமையில் பேசிய அமைச்சரின் உருவ பொம்மை எரிக்க முயற்சி
ஒருமையில் பேசிய அமைச்சரின் உருவ பொம்மை எரிக்க முயற்சி
ADDED : பிப் 12, 2026 05:02 AM
அவனியாபுரம்: அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை, மதுரை சின்ன உடைப்பு பகுதியில் சிலர் எரிக்க முயன்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக, நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், சின்ன உடைப்பு பகுதியில், வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் முற்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்து, வெளியேற மாட்டோம் என, அப்பகுதி மக்கள் சில நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், மதுரையில் நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், தி.மு.க., -- எம்.பி., கனிமொழியிடம், மனு அளிக்க அப்பகுதியினர் சென்றனர். அப்போது, அங்கிருந்த அமைச்சர் மூர்த்தி, அவர்களை ஒருமையில் பேசியதாக, நேற்று, சின்ன உடைப்பு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிலர், அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார், உருவ பொம்மையை பறித்து சென்றனர்.