ADDED : ஆக 17, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் சந்தப் பேட்டையை சேர்ந்த அப்துல்லா. சென்னை யில் ஆட்டோ ஓட்டு கிறார். மனைவி ஜாஸ்மின் டயானா.
இவர்களது மகன் முகமது அர்பான் 3, நேற்று மாலை வீட்டு முன் விளையாடிய போது டூவீலரில் வந்த இருவர் முகமது அர்பானை கடத்தி சென்று பட்டாளம் பகுதி யில் வைத்து கல்லால் தாக்கினர். சிறுவன் சத்தம் போடவே விட்டுச் சென்றனர். காயம்பட்ட சிறுவன் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்ஸ்பெக்டர் சிவசக்தி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் தேடுவதோடு கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரிக்கிறார்.