ADDED : செப் 03, 2026 01:25 AM

அ நிறம் | அளவு
திருமங்கலம்: பேரையூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். மைக் செட் அமைப்பதில் இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஊர்காவலன், மகன் முத்துக்கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்தது.
2013ல் வடிவேலுவை இருவரும் வெட்டினர். வழக்கு திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் மூவேந்தர் ஆஜரானார். ஊர்க்காவலன் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு தள்ளுபடி ஆனது. முத்துகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டார்.
