நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வில்லாபுரம் பிரகாஷ். அதே பகுதியில் ஓட்டல் நடத்துகிறார். அங்கு 2018 ல் அதே பகுதி ஜெயமாரி 54, பார்சல் சாப்பாடு கேட்டார். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெயமாரி அங்கு பாத்திரத்திலிருந்த கொதிக்கும் எண்ணெயை பிரகாஷ் மீது ஊற்ற முயன்றார். அவர் விலகிக் கொண்டார்.
அருகிலிருந்த விருதுநகர் மாவட்டம் பூபாலப்பட்டி கருப்பசாமி 72, மீது ஊற்றியதில் காயமடைந்தார். ஜெயமாரி மீது அவனியாபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி சரவணபவன் பிறப்பித்த உத்தரவு: ஜெயமாரிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்ட னை, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கருப்பசாமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

