ADDED : நவ 22, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வி.எஸ்.நகர் மாதவராஜ் மனைவி செந்தமிழ்ச்செல்வி 52. நகரி ஜவுளி பூங்காவில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு கம்பெனி பஸ்சில் வந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது காரில் வந்தவர்கள் இரண்டரை பவுன் தாலியை பறிக்க முயன்றனர். அலறல் சத்தம் கேட்டு ஆட்கள் வரவே தப்பினர்.
இதுதொடர்பாக கச்சைகட்டி மூர்த்தி 37, திண்டுக்கல் கட்டக்கூத்தன்பட்டி துரைமுருகனை 27, வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.