/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அக்டோபரில் டெங்கு சீசன் துவங்கும் சுற்றுப்புறத்தில் கவனம் தேவை
/
அக்டோபரில் டெங்கு சீசன் துவங்கும் சுற்றுப்புறத்தில் கவனம் தேவை
அக்டோபரில் டெங்கு சீசன் துவங்கும் சுற்றுப்புறத்தில் கவனம் தேவை
அக்டோபரில் டெங்கு சீசன் துவங்கும் சுற்றுப்புறத்தில் கவனம் தேவை
ADDED : அக் 05, 2025 03:25 AM
மதுரை : வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவும் என்பதால் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி செய்ய வேண்டும் என்கிறார் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன்.
மதுரையில் நேற்று 30 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 51 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். தற்போதுள்ள 'ப்ளூ' பாதிப்பில் காய்ச்சல், இருமல், சளி இருக்கும். 2 முதல் 3 நாட்களில் குணமாகின்றனர். மதுரையில் டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை. இப்போதுள்ள சீசனுக்கு டெங்கு கொசுக்களின் உற்பத்தி பெருக்கம் அதிகமாகும் போது டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார் குமரகுருபரன்.
அவர் கூறியதாவது: கடந்த அக்டோபரில் தினமும் ஒன்றிரண்டு பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர். மழை சீசன் என்பதால் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி செய்ய வேண்டும். சிரட்டை, ரப்பர், பேப்பர் கப்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். அதில் சேரும் சில மழைத்துளிகள் மூலம் டெங்கு கொசுக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும். வீட்டில் உள்ள தண்ணீர் பாத்திரங்களை முழுமையாக மூடவேண்டும். தண்ணீரை காய்ச்சிய பின் குடிக்க வேண்டும். காய்ச்சலுக்கு கை வைத்தியம் செய்யாமல் டாக்டரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. காய்ச்சல் நோயாளிகள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது மற்றவர்களுக்கு நல்லது என்றார்.