ADDED : டிச 24, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 71 வாகனங்கள் டிச. 30ல் ஏலம் விடப்படுகின்றன.
எஸ்.பி., அர்விந்த் தலைமையில் நடக்கும் இந்நிகழ்வில் ஏலம் எடுக்க விரும்புவோர் வாகனங்களை பார்வையிட்டு முன்பணமாக டூவீலர்களுக்கு ரூ.5 ஆயிரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரத்தை டிச. 26 முதல் 28க்குள் எஸ்.பி. அலுவலக மதுவிலக்கு பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற வேண்டும்.